டெல்லியில் கிரிக்கெட் விளையாடி இளம் கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்திய விஜய் வசந்த் எம்.பி.
- சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாட உள்ளனர்.
- விஜய் வசந்த் சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார்.
டெல்லியில் நடைபெறும் 14 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் சார்பாக பல்வேறு அணிகள் தலைநகர் டெல்லிக்கு வருகை தந்தனர்
தமிழகத்திற்காக விளையாடும் அணிகளில் கன்னியாகுமரி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாட உள்ளனர்.
இந்நிலையில் டெல்லிக்கு வருகை தந்த இளம் கிரிக்கெட் வீரர்களை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து போட்டிகளில் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்
அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார்.
தொடர்ந்து தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்திருந்த இளம் கிரிக்கெட் அணிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து விஜய் வசந்த், அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.