உள்ளூர் செய்திகள்

ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர், டி.ஐ.ஜி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

வீரவணக்கநாள் அனுசரிப்பு: உயிர்நீத்த காவலர்களுக்கு டி.ஐ.ஜி, எஸ்.பி அஞ்சலி

Published On 2023-10-21 12:21 IST   |   Update On 2023-10-21 12:21:00 IST
  • ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி அபினவ்குமார், கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி பாஸ்கரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல்:

ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் போலீசார் அணிவகுப்பு நடத்தப்பட்டு எல்லையில் உயிர்தியாகம் செய்த காவலர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் இந்த நாளில் காவல்துறை சார்பில் மலர்வளையம் வைத்தும், மவுனஅஞ்சலியும் செலுத்தப்படுவது வழக்கம். 1954-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த உதவி ஆய்வாளர் கரம்சிங் தலைமையில் 10 காவலர்கள் சீனப்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களின் நினைவாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி அபினவ்குமார், கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி பாஸ்கரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் காவல்துறையை சேர்ந்த பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News