உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே துணிகரம்: மின்வாரிய ஊழியர்களை சிறைபிடித்து ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை

Published On 2022-06-27 08:19 GMT   |   Update On 2022-06-27 08:19 GMT
  • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 கம்ப்யூட்டர்கள், 5 மின்மாற்றிகளின் பொருட்கள் உள்ளிட்ட வற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
  • 10 பேர் கும்பலுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரிகையில் துணை மின் நிலைய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 26-ந்தேதி அன்று 23 முதல் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத 10 பேர் கும்பல் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்தனர்.

அங்கு அலுவலக கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கு பணியில் இருந்த ரியாத், முனியப்பன் ஆகியோரை சிறை பிடித்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 கம்ப்யூட்டர்கள், 5 மின்மாற்றிகளின் பொருட்கள் உள்ளிட்ட வற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் காயில்களை திருடி விட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து மின்வாரிய உதவி பொறியாளர் பராமரிப்பு பிரிவு அலுவலர் முருகன் பேரிகை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்களின் கைரேகை பதிவுகள் கிடைத்துள்ளது. அதன் மூலம் அந்த கும்பலை பிடிக்க வலை விரித்துள்ளார்.

Similar News