உள்ளூர் செய்திகள்

கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட பீரோவை படத்தில் காணலாம். 

விழுப்புரத்தில் துணிகரம் 2 வீடுகளை உடைத்து நகை பணம் கொள்ளை

Published On 2022-11-30 07:41 GMT   |   Update On 2022-11-30 07:41 GMT
  • பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை 98 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
  • திருட்டை மர்ம நபர்கள் பின்பக்க கதவு வழியாக இல்லாமல் சமையலறையில் உள்ள எக்ஸாஸ் பேன் இருக்கும் சிறிய துளை வழியாக மர்ம நபர்கள் உள்ளே வந்து திருடி சென்றது தெரியவந்தது.

விழுப்புரம்:

விழுப்புரத்தில் கீழ்பெரும்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45) விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே எலக்ட்ரிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹேமா இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ரமேஷ் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து இரவு தூங்கச் சென்றார்.

இன்று அதிகாலை ரமேஷ் மனைவி எழுந்து சமையலறைக்கு சென்றார். அப்போது அருகில் இருந்த பீரோ திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை 98 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இந்த திருட்டை மர்ம நபர்கள் பின்பக்க கதவு வழியாக இல்லாமல் சமையலறையில் உள்ள எக்ஸாஸ் பேன் இருக்கும் சிறிய துளை வழியாக மர்ம நபர்கள் உள்ளே வந்து திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்திருக்கும் வீட்டை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் சிறிய அளவிலான எக்ஸ்சாட் விசிறிவழியாக எப்படி இந்த திருட்டை நடத்தியுள்ளனர். இந்த திருட்டில் சிறுவர்களை பயன்படுத்தினார்களா அல்லது சிறுவர்கள் தான் திருடி சென்றனரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் சாலா மேடு எம்.ஜி.ஓ சண்முகா நகரை சேர்ந்தவர் பாத்திமா (45) இவர் 10 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.நேற்று இரவு உறவினர் வீட்டில் இருந்து சண்முக நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பாத்திமா வீட்டுக்குள் சென்று பீரோவை பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 பவுன் நகை திருடு போயிருப்பது கண்டு திடுக்கிட்டார்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் 2 வீடுகளில் நூதன முறையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News