உள்ளூர் செய்திகள்
ஓசூரில் துணிகரம்: நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் நகை பறிப்பு
- தீபாவின் அருகில் வந்ததும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்த ஆசாமி தீபாவின் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க சங்கிலியை பறித்தான்.
- இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் நரசிம்மா காலனியை சேர்ந்தவர் கேசவல்லன். இவரது மனைவி தீபா (வயது 38).இவர் மோரணப்பள்ளி ஜ ங்சன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
தீபாவின் அருகில் வந்ததும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்த ஆசாமி தீபாவின் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க சங்கிலியை பறித்தான். இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
திருடு போன சங்கிலியின் மதிப்பு ரூ.2.5 லட்சம் என்று கூறப்படுகிறது.இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம் குறித்து தீபா கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.