உள்ளூர் செய்திகள்

ஓசூரில் துணிகரம் கத்திமுனையில் 6 பேரிடம் ரூ.1½ லட்சம் பணம், செல்போன்கள் பறிப்பு

Update: 2022-06-28 09:26 GMT
  • பறிபோன செல்போன்களின் மதிப்பு ரூ.15,000- ஆகும்.
  • மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓசூர்,

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது27), இவர், ஓசூர் அருகே பத்தலபள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் ஒரு அறையில், நண்பர்கள் 5 பேருடன் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று அறைக்கதவு திறந்திருந்த நிலையில் 2 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கு கத்திமுனையில் ரொக்கப் பணம் ரூ.1,21,500 மற்றும் 4 செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். பறிபோன செல்போன்களின் மதிப்பு ரூ.15,000- ஆகும்.

இதுகுறித்து செல்வம் உள்பட 6 பேரும், ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News