உள்ளூர் செய்திகள்

கோவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மழை தரும் வேம்பரசு விநாயகர் கோவிலில் குடமுழுக்கு

Published On 2022-12-05 09:14 GMT   |   Update On 2022-12-05 09:14 GMT
  • புனிதநீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது.
  • விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்க ப்பட்டன.

பூதலூர்:

பூதலூர் அருகே கோவில்பத்து சிவன் கோவில் தெருவில் உள்ள மழை தரும் வேம்பரசு விநாயகர் கோவிலில் குடமுழுக்கு விழா கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சிறப்பாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

இரண்டு கால யாகசாலை பூஜைகளை திருப்பூர் திருநாமலிங்கேஸ்வர சிவம் தலைமையில் ஸ்ரீ ஹரி கிருஷ்ணன் பட்டாச்சாரியார், சந்தோஷ் சிவம் ஆகியோர் நிகழ்த்தினர்.

மண்டபார்ச்சனை, வேதிகா சார்ச்சனை, பூர்ணாகுதி, உபசார பூஜைகள், வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாடி சந்தானம், ஸ்பரிசாகுதி, த்ரவ்யாகுதி ஆகிய பூஜைகள் நடைபெற்றன.

பின்னர், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது.

பின்னர், கோவில் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் ஐயப்ப குருசாமிகள், அய்யப்ப பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை பூதலூர் கோவில்பத்து கிராம மக்கள் செய்திருந்தனர். குடமுழுக்கு விழா நடந்த சில‌ நொடிகளில் பலத்த மழை பெய்தது பக்தர்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News