உள்ளூர் செய்திகள்

வேலூர் சிறார் சீர்திருத்த பள்ளி வார்டன்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த காட்சி.

அரசினர் பாதுகாப்பு இல்ல காவலர்கள் பணி பாதுகாப்பு கேட்டு மனு

Published On 2023-03-28 14:53 IST   |   Update On 2023-03-28 14:53:00 IST
  • கேவலமாக பேசுவதாக புகார்
  • சம்பள உயர்வு, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

வேலூர்:

வேலூர் காகிதப்பட்டறை அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் நேற்று தப்பி ஓடி விட்டனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் காவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசினர் பாதுகாப்பு இடத்தில் பணியாற்றி வருகிறோம். கடந்த சில மாதங்களாக இல்லத்தில் உள்ள சிறார்களின் நடவடிக்கை களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

24 மணி நேரமும் பணியில் இருக்கும் எங்களை சிறார்கள் கேவலமாகவும் அசிங்கமாகவும் பேசுகிறார்கள்.

நேற்று பணியில் இருந்த காவலர்களை தாக்கி விட்டு 6 பேர் தப்பி ஓடி விட்டனர். இதனால் எங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.

எனவே எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். சம்பள உயர்வு, பணி நிரந்தரம் போன்றவற்றை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News