இளம்ெபண்ணை 5-வதாக திருமணம் செய்து மோசடி
- எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
- பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது
வேலூர்:
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று நடந்தது.கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியை சேர்ந்த 38 வயது பெண் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 15 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கணவர் திடீரென இறந்து விட்டார். எனக்கு சிறிய வயதாக இருந்ததால் என்னுடைய தாய் மறுமணம் செய்து வைப்பதற்காக ஆன்லைனில் பதிவு செய்து இருந்தார்.
திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் தொடர்பு கொண்டு நான் காட்பாடியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறேன் என்று கூறி என்னை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை பணம் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
திருமணத்திற்கு பிறகு அவர் என்னை ஏமாற்றி 5-வது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தேன்.
என் மீது கால் புணர்ச்சி கொண்ட அவர் என்னுடைய போட்டோக்களை பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செல்போன் என்னை பதிவிட்டு நடத்தையை இழிவுபடுத்தி உள்ளார்.
இதனால் பலர் என்னை தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைக்கின்றனர். போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறவேண்டும் என கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வேலை வாங்கி தருவதாக மோசடி
காட்பாடி அடுத்த கரிகிரியை, ஏழுமலை (வயது 29) அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது நண்பர் ஒரு நபரை அறிமுகப்படுத்தினார். கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தர முடியும் என்று கூறி ரூ.7 லட்சம் வாங்கி கொண்டார்.
இப்போது வேலை பற்றி கேட்டபோது உனக்கு பணமும் கிடையாது. வேலையும் வாங்கிதர முடியாது என்று கொலை மிரட்டல் விடுகிறார். ஆகவே மோசடி செய்த அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
காட்பாடியைச் சேர்ந்த மகாலட்சுமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; காட்பாடியைச் சேர்ந்த பிரபல அரசியல் கட்சி நிர்வாகி நான் நடத்தி வந்த சீட்டில் உறுப்பினராக சேர்ந்து அவ்வப்போது என்னிடம் பணம் பெற்றார்.
நான் நடத்திய சீட்டில் சுமார் ரூ.4,28 லட்சம் பணமும் ,என்னுடைய 30 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.6 லட்சம் ரூபாயும்,எனது உறவினரிடமிருந்து ரூ.13 லட்சமும் வாங்கிக் கொடுத்துள்ளேன்.
தற்போது பணத்தை கேட்டால் தர மறுக்கிறார்.மேலும் என்னை மிரட்டுகிறார். என்னுடைய பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.