உள்ளூர் செய்திகள்

வேலூர் ஊரீஸ் பள்ளி மையத்தில் தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.

கோர்ட்டு காலி பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு

Published On 2022-10-16 14:25 IST   |   Update On 2022-10-16 14:25:00 IST
  • வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் எழுதினர்
  • தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு

வேலூர்:

ஐகோர்ட்டு ஆணைக்கினங்க மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள முதுநிலை மற்றும் இளநிலை கட்டளை பணியாளர், நகல் எடுப்பவர், நகல் வாசிப்பாளர், நகல் பரிசோதகர் ஆகிய பணியிடங்களுக்கு இன்று எழுத்து தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரம்பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இன்று காலை தேர்வு எழுத விண்ணப்பி த்திருந்தவர்கள் பலத்த பரிசோதனைக்கு பின்னர் 9-30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெறுவதை யொட்டி தேர்வு மையங்களுக்கு முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News