உள்ளூர் செய்திகள்

வேலூர் வி.ஐ.டி.யில் தேசிய மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வி.ஐ.டி.வேந்தர் விசுவநாதன் பரிசு வழங்கினார். அருகில் போலீஸ் அதிகாரி தேன்மொழி, வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன்,

ஜி.வி. செல்வம், மீனாட்சி சின்கா மற்றும் பலர் பங்கேற்றனர்.

பெண்களுக்கு தகுந்த உரிமை மரியாதையை கொடுக்க வேண்டும்

Published On 2023-03-10 14:36 IST   |   Update On 2023-03-10 14:36:00 IST
  • வி.ஐ.டி.யில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் தேன்மொழி ஐ.பி.எஸ். பேச்சு
  • 50 சதவிகித பெண்கள் பணியாற்றிட வேண்டும்

வேலூர்:

வேலூர் விஐடியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாநில குற்றப் புலனாய்வுத்துறை, காவல்துறையின் தலைவரான தேன்மொழி ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சர்வதேச மகளிர் தின விழா

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

பெண்களுக்கு சரியான உரிமையும், தகுந்த மரியாதையையும் கொடுக்க வேண்டும். பெண்கள் எப்பொழுதும் தங்களை சுற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் தியாகத்துக்கும் மட்டும் பிறக்கவில்லை வாழ்க்கையை வாழ்வதற்கும் தான் எனக் கூறினார். விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

திருவள்ளுவர் பெண்மையைப் பற்றி உயர்வாகத்தான் கூறியுள்ளார். உலகில் 193 நாடுகள் உள்ளன, இதில் உலகளவில் பெண்கள் 12 பேர் பிரதம மந்திரியாகவும், 17 பெண்கள் குடியரசு தலைவராகவும் உள்ளனர்.

நாட்டில் பாராளுமன்றம், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும். அதேபோல் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாட்டில் பெண் குழந்தைகளின் கல்வி இன்னும் அதிகரிக்க வேண்டும், பெண், கல்வி பயில்வதில் நாம் பின்தங்கி உள்ளோம், குறிப்பாக உயர்கல்வியில். பெண் குழந்தைகள் பள்ளி கல்வி படிக்கும்போதே நின்று விடுகிறார்கள், இது ஆபத்தானது இதற்கு நிரந்தர நடவடிக்கை நாம் எடுக்க வேண்டும்.

நம் நாட்டில் பாராளுமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் 14 பெண்கள், சட்டசபையில் 8 பெண்கள் தான் உள்ளனர். அதேபோல் இந்திய குடிமைப் பணியான ஐ.ஏ.எஸ்.ல் 13 சதவிகிதம், ஐ பி எஸ்இல் 9 சதவிகிதம், ஐஎஃப்எஸ் இல் 8 சதவிகிதம் பெண்கள் தான் உள்ளனர். இந்த நிலை எதிர்வரும் காலங்களில் பன்மடங்காக உயர வேண்டும்.

அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் இதுவரை 7000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகளின் கல்வி பயில்வதற்கு உதவி உள்ளோம்.

இந்த அறக்கட்டளை மூலம் உதவி பெற்றவர்களில் 66 சதவிகிதம் பெண்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய குறைந்தபட்சம் 50 சதவிகித பெண்கள் பணியாற்றிட வேண்டும் எனக் கூறினார்

விஐடி துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் வாழ்த்துரை வழங்கினார்.

அவர் பேசியதாவது:-

மனிதனின் வாழ்க்கை பெண்கள் இல்லாமல் முழுமை யடைவதில்லை, பெண்கள், ஆண்களுக்கு தாயாக, சகோதரியாக, மனைவியாக மற்றும் குழந்தையாக உள்ளனர். குறிப்பாக பெண் குழந்தைகள் வேண்டும்.

காரணம் வயதான காலத்தில் பெண் குழந்தைகள் தான் பெற்றோர்களை அன்புடன் கவனித்துக் கொள்வார்கள். அதேபோல் பெண்களிடம் நம் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்களில் முக்கியமானவை சேவை மற்றும் தியாகம். விஐடியில் பெண்களுக்கு தகுந்த உரிமை மற்றும் மரியாதை கொடுக்கப்படுகிறது என்றார்.

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாநில குற்றபுலனாய்வு துறை, காவல் துறை தலைவர் தேன்மொழி ஐபிஎஸ் மற்றும் விஐடி வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் பரிசுகளை வழங்கினார்கள்.

சிறப்பு விருந்தினராக சிப்லா நிறுவனத்தின் உதவி இயக்குனர் மீனாட்சி சின்கா, விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், பதிவாளர் மற்றும் மாணவர் நலன் இயக்குனர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News