உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி பேசிய காட்சி.

பல்வேறு திட்ட பணிகளுக்கு மத்திய அரசு 60 சதவீதம் நிதி வழங்குவதை மறைப்பது ஏன்?

Update: 2022-10-06 09:53 GMT
  • வேலூரில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பேச்சு
  • மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம்அளித்தல் துறை இணை மந்திரி நாராயண சாமி கலந்து கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி பேசியதாவது:-

மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக 60 சதவீதம் நிதி வழங்குகிறது. மாநில அரசு 40 சதவீத நிதி வழங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் மத்திய அரசு வழங்கும் நிதி குறித்து ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பினார்‌. மத்திய அரசு வழங்கும் நிதியை ஏன் மறைக்கிறீர்கள்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசு நிதி உதவி பெறும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்.ஒருதுறை மட்டுமே பங்கேற்பது ஏற்புடையதாக இல்லை என்றார். தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் குறித்து மத்திய மந்திரி ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News