உள்ளூர் செய்திகள்

அறுந்து விழுந்த மின்கம்பியை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்த காட்சி.

ரெயில்வே மின்கம்பிகள் அறுந்து விழுந்தது ஏன்?

Published On 2022-08-17 15:12 IST   |   Update On 2022-08-17 15:12:00 IST
  • பராமரிப்பு பணிகள் குறைபாடு என குற்றச்சாட்டு
  • ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை

வேலூர், ஆக.17-

சென்னையில் இருந்து காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு வழியாக கோவை செல்லும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து கோவையை நோக்கி புறப்பட்டது.

அறுந்து விழுந்தது

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் அருகே வந்த போது உயர்மின் அழுத்த கம்பி திடீரென அறுந்து ரெயில் மேல் விழுந்தது.

இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்னையில் இருந்து வந்த திருவனந்தபுரம், லால்பாக், ரெயில் மற்றும் சரக்கு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

இது குறித்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே ஊழியர்கள் 15 பேர் கொண்ட மின் பொறியாளர் குழுவினர் டவர் வேகன் வண்டியை கொண்டு அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பயணிகள் அவதி

சுமார் 1.30 மணி நேரத்திற்கு பிறகு மின் கம்பி சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது.இதனால் ரெயில்கள் 1.45 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மின்கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுவதை தடுக்க ரெயில்வே நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரியான சீரமைப்புகள் இல்லாததால் இதுபோன்று மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. பராமரிப்பு பணிகளில் குறைபாடு ஏற்பட்டதால் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.மேலும் இது போன்ற சம்பவங்களை தடுக்க மின் கம்பிகளை அடிக்கடி பராமரிக்க வேண்டும் என ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மின் கம்பிகள் அறுந்து விழக்காரணம் என்ன என்பது குறித்து காட்பாடி ரெயில்வே மின்கம்பி பராமரிப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News