உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் என்சிசி கமாண்டிங் அதிகாரி சஞ்சய் ஷர்மா பேசிய காட்சி.

வேலூர் என்.சி.சி. மாணவர்கள் ஆங்கிலம், இந்தி மொழியில் பேசும் திறனை வளர்க்க வேண்டும்

Published On 2022-10-30 14:31 IST   |   Update On 2022-10-30 14:31:00 IST
  • கமாண்டிங் அதிகாரி பேச்சு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

காட்பாடி 10-வது பட்டாலியன் தேரிய மாணவர் படை அலுவலர்கள் கூட்டம் என்.சி.சி அலுவலக வளாகத்தில் நடந்தது.

15 கல்லூரிகள் மற்றும் 29 பள்ளிகளைச் சேர்ந்த என்.சி.சி அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு 10-வது பட்டாலியவின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய்ஷர்மா தலைமை தாங்கினார். பட்டாலியனின் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே. சுந்தரம் முன்னிலை வகித்தார்.

விஐடி பல்கலைக்கழக என்.சி.சி அலுவலர் ரவி சங்கர் பாபு வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் அதிகாரி கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய்ஷர்மா பேசியதாவது:-

"தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கை என்சிசி மாணவர்கள் கொண்ட பட்டாலியன் காட்பாடி 10வது பட்டாலியன் ஆகும். என்சிசி மாணவர்கள் அகில இந்திய அளவில் பங்கேற்கும் போது தமது முழுத் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அகில இந்திய குடியரசு தின போட்டிகளில் நமது பட்டாலியனைச் சேர்ந்த என்சிசி மாணவ, மாணவிகள் பெரும் அளவில் கலந்து கொண்டு பட்டாலியனுக்கு பெருமை சேர்க்க வேண்டும். என்சிசி மட்டும் அல்லாமல் படிப்பிலும் கவனம் கொண்டு நல்ல முறையில் தேர்ச்சி பெற்று ராணுவத்தில் சேர்ந்து அதிகாரிகளாக வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சுபேதார் மேஜர் சட்பீர் சிங், அலுவலக கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த், என்சிசி 10-வது பட்டாலியனின் மக்கள் தொடர்பு அலுவலர் க. ராஜா, கல்லூரிகளைச் சேர்ந்த என்சிசி அலுவலர்கள் ரவி சங்கர் பாபு, விக்ரமன், முகம்மது அசாருதீன், ஞானலின் ஷைனி, ஜாகீர் உசைன், தென்னரசன், பால் தேவசிகாமணி, ராஜகோபால் உள்பட கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த என்சிசி அலுவலர்கள், என்சிசி பயிற்சி பிரிவு சுபேதார்கள் கே.ஆர். குமார், டி.அரவிந்தன், அவில்தார்கள் துரைமுருகன், ரமேஷ், எம்.சீனிவாசன், எஸ். சீனுவாசன், ராமாராவ், பாலாஜி, ரஞ்சித், ஜெஸ்டின், ஜீட்சிங் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முடிவில் பயிற்சி பிரிவு சுபேதார் குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News