உள்ளூர் செய்திகள்

வேலூர் கோட்டை அகழியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும் காட்சி.

வேலூர் கோட்டை அகழி நீர் மோட்டார் மூலம் வெளியேற்றம்

Published On 2022-12-11 14:35 IST   |   Update On 2022-12-11 14:35:00 IST
  • ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தண்ணீர் புகாமல் இருக்க நடவடிக்கை
  • மழை நிற்கும் வரை இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல்

வேலூர்:

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கடந்தாண்டு நவம்பர் மாதம் மழையால் தண்ணீர் புகுந்தது. இதனால் கோவிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டது.

இதனிடையே கோவிலில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் தண்ணீர் வெளியேறவில்லை.

பின்னர் நாளடைவில் தண்ணீர்வற்றியது.

தற்போது வேலூரில் மழை பெய்து வருவதால் கோட்டை அகழியில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. அகழிநீர் வெளியேற வாய்ப்பில்லாததால் கோவிலுக்குள் வரும் சூழல் நிலவுகிறது.

இதனை கருத்தில் கொண்டு வேலூர் மாநகரட்சி நிர்வாகம் சார்பில் கோட்டைக்கு பின்புறம் அகழியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதற்கான 10 எச்.பி. திறன் கொண்ட மின்மோட்டார் வாங்கப்பட்டு அங்கு பொருத்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த குழாய் மூலம் ஒரு நிமிடத்துக்கு 2 ஆயிரம் லிட்டர் அகழிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை நிற்கும் வரை இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News