உள்ளூர் செய்திகள்
கலவரங்களை தடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.
கலவரம் தடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி
- வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
- டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டனர்
வேலூர்:
வேலூர் நேதாஜி மைதானத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஏற்படும் கலவரங்களை தடுப்பது குறித்து கராத்தே வகுப்பு பயிற்சி ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளித்தனர்.
மேலும் மது போதையில் பொது இடங்களில் கத்தியை காட்டில் மிரட்டுபவர்களை அடக்குவது, அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.