உள்ளூர் செய்திகள்

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் உயர்வு

Published On 2023-07-26 14:09 IST   |   Update On 2023-07-26 14:09:00 IST
  • கிலோ ரூ.130-க்கு விற்பனை
  • பொதுமக்கள் அதிர்ச்சி

வேலூர்:

ஆந்திர மாநிலம் சித்தூர், மதனப்பள்ளி, புங்கனூர் மற்றும் கர்நாடகாவில் இருந்து வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் தக்காளி வருவது வழக்கம்.

கடந்த சில மாதங்களாக ஆந்திரா கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் வேலூர் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து பாதியாக குறைந்தது.

இதனால் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி விலை மளமளவென 100 ரூபாயை எட்டியது.

மேலும் கத்திரிக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் கணிசமாக உயர்ந்தது.

நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் காய்கறிகளின் விலைகளை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு சிலர் காய்கறிகளின் விலை உயர்ந்து உள்ளதால் காய்கறிகளை வாங்காமல் திரும்பிச் சென்றனர்.

கடந்த சில நாட்களாக கிலோ ரூ.90 முதல் 100 வர விற்பனையானது. இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் நேற்று ரூ.100-க்கு விற்கப்பட்ட நடுத்தர வகை தக்காளி இன்று காலை 130 ரூபாய்க்கும், ரூ 80-க்கு விற்கப்பட்ட சிறிய வகை தக்காளி ரூ 100-க்கு விற்கப்படுகிறது.

தக்காளி விலை மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News