உள்ளூர் செய்திகள்

லாரியில் இருந்து மூட்டைகள் வேன்மீது விழுந்தது. இதில் மொபட் மீது வாகனம் ஏறி நின்ற காட்சி.

லாரியில் இருந்து வேன் மீது சரிந்து விழுந்த மூட்டைகள்

Published On 2023-01-28 15:31 IST   |   Update On 2023-01-28 15:31:00 IST
  • மொபட் சேதம்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

குடியாத்தம் நகராட்சி 15 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயன்.

நேற்று காலையில் குடியாத்தம் கொண்டசமுத்திரம் பலமநேர் ரோட்டில் உள்ள இறைச்சி கடைக்கு மொபட்டில் சென்றுள்ளார்.

மொபட்டை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு இறைச்சி வாங்க உள்ளே சென்றார்.

அப்போது மொபட்டுக்கு அருகிலேயே சரக்கு வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது இறைச்சி வாங்கிக்கொண்டு விஜயன் மொபட்டை எடுக்க வரும்போது தெலுங்கானா மாநிலம் சூரிபேட்டை பகுதியிலிருந்து தவிடு முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி சென்ற லாரி அதிலிருந்து மூட்டைகள் சரிந்து விஜயன் நிறுத்தி இருந்த மொபட் பக்கத்தில் இருந்த சரக்கு வாகனம் மீது சரிந்தது.

அப்போது அந்த சரக்கு வாகனம் மொபட் மேல் ஏறி இறங்கி நசுக்கியது. இதனால் மொபட்டை எடுக்க சென்ற விஜயன் அதிர்ச்சியில் உறைந்தார் மயிரிழையில் காயங்கள் இன்றி தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த நகர மன்ற தலைவர் சவுந்தர்ராசன் நகர மன்ற உறுப்பினர்கள் விரைந்து வந்து விஜயனிடம் நலம் விசாரித்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News