அரசு பாதுகாப்பு இல்லத்தில் சிறுவன் ரகளை
- சென்னைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு
- தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல்
வேலுார்:
வேலூர் காகிதப்பட்டறை அருகே, சமூக பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லம் இயங்குகிறது.
இங்கு, பல குற்றச்செயல்க ளில் ஈடுபட்ட 18 வயதுக்கு உட்பட்ட மைனர் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அவ்வப்போது வேறு மையங்களுக்கு மாற்றப்படுவது வழக்கம்.
இந்நிலையில், சேலம் செவ்வாய் பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட் பட்ட பகுதியில் நடந்த ஒரு வழிப்பறி வழக்கில் கைதான 17 வயது சிறுவன் இங்கு தங்க வைக்கப்பட்டி ருந்தான். அவனை சென்னை கெல்லீஸ் பகுதியில் உள்ள பாதுகாப்பு இல்லத்துக்கு மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதற்கான பணி களில் அதி காரிகள் ஈடுபட்டிருந்தனர். ஆனால், அதற்கு அந்த சிறுவன் எதிர்ப்பு தெரி வித்ததாக கூறப்படுகிறது.
திடீர் ரகளையில் ஈடுபட்டான். மேலும், அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர், கட்டடத்தின் மீது ஏறிநின்று, கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து ள்ளான். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்ததும் வேலுார் வடக்கு போலீசார் மற்றும் பாதுகாப்பு இல்ல அலுவலர்கள் சிறுவனை சமாதானப்ப டுத்த முயன்றனர்.
ஆனால், அவன் கீழே இறங்க மறுத்துவிட்டான். இதையடுத்து, வேலுார் இளஞ்சிறார் நீதித்துறை நீதிக் குழும நீதிபதி பத்மகுமாரி அங்குவந்து சிறுவனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரது அறிவுரையை ஏற்று, சிறுவன் கீழே இறங்கினான். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.