கோப்புபடம்
தட்டப்பாறை, அம்முண்டி, அம்மணம்பாக்கம் ஊராட்சி தலைவர் தேர்தல்
- வருகிற 9-ந்தேதி நடக்கிறது
- மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
வேலூர்:
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் மாதம் வரை ஏற்பட்டுள்ள காலி இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி தற்செயல் தேர்தல் நடத்திட தமிழ்நாடு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படு கிறது. வேட்பு மனுக்கள் பெறுவதற்கு 27-ந் தேதி கடைசி நாளாகும். 28-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்குப்பதிவுவருகிற 9-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதியும் நடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் 24வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் அம்மணம்பாக்கம் கிராம ஊராட்சி தலைவர் பதவி வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் தட்டப்பாறை கிராம ஊராட்சி தலைவர், காட்பாடி ஊராட்சி ஒன்றியம் அம்முண்டி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும் தற்செயல் தேர்தல் நடைபெற உள்ளது.
கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி கவுன்சிலர் தேர்தல் நடத்தை விதிகள் கிராம ஊராட்சி முழுமைக்கும் பொருந்தும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.