உள்ளூர் செய்திகள்

சாலை அமைக்க வனத்துறைக்கு இடம் வழங்க வேலூர் மலையில் அளவீடு பணி

Published On 2023-07-24 15:03 IST   |   Update On 2023-07-24 15:03:00 IST
  • சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும்
  • விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

அணைக்கட்டு:

அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 1½ வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து உயிர் இழந்தனர்.

அல்லேரிமலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2 எக்டர் நிலத்திற்கு 6.4 எக்டர் அளவான மாற்று இடத்தை வருவாய் துறை மூலம் அல்லேரி மலையில் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.

வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட அந்த இடம் எங்களுக்கு வேண்டாம்.

தற்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது.

எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்தி ற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.

இதனால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வனத்துைறக்கும் இடம் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி வனத்துறையினருக்கு இடம் வழங்க வேலூர் காகிதபட்டறை பகுதியில் உள்ள மலைைய தேர்வு செய்துள்ளனர்.

நேற்று வேலூர் சப்-கலெக்டர் கவிதா, வேலூர் தாசில்தார் செந்தில் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் காகிதப்பட்டறை மலைப்பகுதியை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து இன்று அளவீடு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News