உள்ளூர் செய்திகள்

காட்பாடி, திருவலம், ராணிப்பேட்டை இடையே சரியான நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் அவதி

Published On 2022-09-11 14:02 IST   |   Update On 2022-09-11 14:02:00 IST
  • அரசு பஸ்கள் வருவது இல்லை
  • பெண்கள் மறித்தால் நிற்பதில்லை

வேலூர்:

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் இருந்து பிரம்மபுரம், சேவூர், சுகர்மில், திருவலம், ராணிப்பேட்டை சிப்காட், முத்துக்கடை வரை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

காலையும் மாலையில் பள்ளி, கல்லூரிக்கும் மற்ற பணிக்களுக்கும் சென்று திரும்புவோர் அதிகம் பயணிக்கும் வழித்தடமாக இருந்து வருகிறது.

இதில் 10ஏ, 10டி, 10சி உள்ளிட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படுவது இல்லை. குறித்த நேரத்துக்கு போதிய அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்க்காமல் தள்ளி நிற்பதாகவும் சில சமயங்களில் நிற்பதே கிடையாது என்றும். காலை வேளைகளில் சில நேரங்களில் ஒரே நேரத்தில் அனைத்து பஸ்கள் சென்றுவிடுவதாகவும் கூறுகின்றனர்.

காலை மற்றும் மாலையில் இயக்கப்படும் பஸ்கள் நேரம் தவறி மிகுந்த கால தாமதத்துடன் இயக்கப்படுவதால் குறித்த நேரத்திற்க்கு பள்ளிக்கோ அல்லது பணிக்கோ செல்ல முடிவது இல்லை என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இடைபட்ட நேரங்களில் பெண்கள் பஸ்கள் நிறுத்தத்தில் நிற்க்கும் போது சில பஸ்கள் நிற்க்காமல் செல்வதாகவும் கூறுகின்றனர்.

இந்த வழிதடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களை முறைபடுத்தி பயணிகள் பயனடையும் வகையில் முறையாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News