உள்ளூர் செய்திகள்

போட்டி தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. முத்துசாமி பேசிய காட்சி.

மாணவர்கள் லட்சியத்தோடு இலக்கை நிர்ணயித்து படித்தால் உயரத்திற்கு செல்லலாம்

Published On 2023-04-15 15:00 IST   |   Update On 2023-04-15 15:00:00 IST
  • வேலூர் சரக டி.ஐ.ஜி. பேச்சு
  • போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

வேலூர்:

வேலூர் முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெற்றி தமிழா என்ற தலைப்பில் போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்திய தொல்பொருட்கள் ஏற்றுமதி கழக செயல் இயக்குனர் ராம செல்வம் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கலந்துகொண்டு பேசியதாவது, நான் படிப்பறிவு இல்லாத ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வந்தவன். கல்வி கற்கும் வாய்ப்பு இல்லை என்றால் நான் இங்கு இல்லை. கல்லூரி காலத்தை மாணவ மாணவிகள் வீணாக்கக்கூடாது.

3 ஆண்டுகள் நீங்கள் படிக்கும் கல்விதான் வருங்காலத்தில் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும். பல ஏழை எளிய மாணவர்கள் படித்து வருவீர்கள்.

இலக்கு நிர்ணயித்து படிக்க வேண்டும். அனைவராலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஆகிவிட முடியாது. ஆசிரியர், போலீஸ், ராணுவ வீரர், தொழிலதிபர், விவசாயி என்று எதுவாக வேண்டு மானாலும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

கல்லூரி காலத்தில் அறிவு, தலைமைப் பண்பு, ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். 3 ஆண்டு படிப்பை முடித்து வெளியே செல்லும்போது தகுதி உள்ளவர்களாக உங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

Similar News