உள்ளூர் செய்திகள்

அமுலுவிஜயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பாராட்டி காட்சி.

வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் கல்லூரி மாணவர் வெண்கல பதக்கம் வென்று சாதனை

Published On 2022-07-12 14:29 IST   |   Update On 2022-07-12 14:29:00 IST
  • அமுலுவிஜயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பாராட்டினார்
  • நியூசிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு தேர்வு

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.மூர்த்தி இவர் ஆசிய வலுதூக்கும் வீரர்.

இவரது மகன் எம்.ஜெய் மாருதி வயது 17,வேலூரில் உள்ள வி.ஐ.டி.யில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் ஜூலை 5 முதல் 10-ந் தேதி வரை தேசிய அளவிலான சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட குடியாத்தம் வீரர் ஜெய் மாருதி 74 கிலோ உடல் எடை ஸ்குவாட் பிரிவில் 260 கிலோ, பெஞ்ச் பிரஸ் 122.5 கிலோ, டெட்லிப் பிரிவில் 225 கிலோ என மொத்தம் 607.5 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

சாதனை படைத்த ஜெய்மாருதி வரும் டிசம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் சப் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குடியாத்தத்திற்கு பெறுமை சேர்த்த ஜெய்மாருதியை அமுலுவிஜயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் சாதனை படைத்த ஜெய்மாருதியை தமிழ்நாடு வலுதூக்கும் சங்க செயலாளர் நாகராஜன், வேலூர் மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் இளமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News