உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் துணை கோட்ட காவல்துறையினருடன் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆலோசனை நடத்திய போது எடுத்த படம்.

சமூக விரோதிகளுடன் உடந்தையாக இருக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை

Published On 2022-09-23 15:30 IST   |   Update On 2022-09-23 15:30:00 IST
  • போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
  • போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அறிவுறுத்தல்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் குடியாத்தம் துணை கோட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

டி,எஸ்.பி. ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, கணபதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிலம்பரசன், சிவச்சந்திரன், தேவபிரகாஷ், பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்

கூட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் சமூக விரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக கஞ்சா, கள்ளச்சாராயம், போதைப் பொருட்களான குட்கா, ஹான்ஸ், லாட்டரி, மணல் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றிலும் ஒழிக்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு சமூக விரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் இதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்கள், அதை வெளியூரிலிருந்து கடத்தி வருபவர்கள், அதனை பதுக்கி வைப்பவர்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவியாக இருக்கும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News