உள்ளூர் செய்திகள்

வேலாடும் தனிகைமலையில் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2023-02-10 15:42 IST   |   Update On 2023-02-10 15:42:00 IST
  • சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நடந்தது
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

அணைக்கட்டு:

அணைக்கட்டு அருகே வேலாடும் தனிகைமலையில் உள்ள செல்வவிநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

அணைக்கட்டு வட்டம், கெங்கநல்லூர் மதுரா, மூலைகேட் பகுதியில் 2000 அடி உயரமுள்ள தனிகைமலையின் உச்சியில் அமைந்து இருக்கும் செல்வவிநாயகருக்கு நேற்று சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு பால், தயிர், நெய், தேன் உட்பட 9 வகையான திரவியங்கள் மற்றும் 108 வகையான மூலிகைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.

இதில் சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் 2000 அடி உயரமுள்ள மலைக்கு கால்நடையாக நடந்து வந்து விழாவில் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

Similar News