குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்ட போது எடுத்த படம்.
தென்னிந்திய அளவிலான கபடி போட்டி
- குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் நடந்தது
- 750 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெறுகிறது முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் மூன்றாம் பரிசாக 50,000 உள்ளிட்ட பல்வேறு ரொக்க பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்படுகிறது.
தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகளில் தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த அணிகளான ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரித்துறை, திருச்சி தமிழ்நாடு போலீஸ், சென்னை சிட்டி போலீஸ், ஹைதராபாத் ஆர்டிஐ, பெங்களூர் மெட்ராஸ் என்ஜினியரிங் குரூப்ஸ் ராணுவ அணி, ஜே கே அகாடமி கேரளா, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மிகச்சிறந்த ஆண்கள் அணியும், பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம், அந்தியூர் சக்தி பிரதர்ஸ், பெங்களூர் நேஷனல் ஸ்போர்ட்ஸ், சென்னை பிரண்ட்ஸ் உள்பட 25க்கும் மேற்பட்ட சிறந்த அணிகள் என மொத்தம் 750 க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.