குடியிருப்பு பகுதிகளில் பிடிக்கப்படும் பாம்புகள் சாவு
- பொதுமக்கள் அதிர்ச்சி
- 4 நாட்களாக சாக்கு ைபயிலே அடைத்து வைத்திருந்தனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இவை மலை சார்ந்த பகுதி என்பதால் சாரைப்பாம்பு, நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், மலைப்பாம்பு உள்ளிட்ட வைகள் குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி நுழைகின்றன.
இதனை பொதுமக்கள் துன்புறுத்தாமல் பாம்பை பார்த்த உடனே வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் வனத்து றையினர் உடனடியாக சென்று நவீன கருவி மூலம் பாம்புகளைப் பிடிக்கின்றனர். அவ்வாறு பிடிக்கப்படும் பாம்புகள் சாக்கு பைகளின் மூலம் எடுத்துச் சென்று, வனப்பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக விடப்படுகிறது. இதில் வனத்துறையினர் சில சமயங்களில் பிடிக்கப்படும் பாம்புகளை வனத்துறை அலுவல கத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
அதனை காப்பு காட்டு பகுதிகளில் விடாமல் வன அலுவலகத்திலேயே வைத்து விடுவதாகவும் கூறப்படு கிறது. இரும்பு கம்பியாலான கருவிகளை பயன்படுத்தி பிடிக்கும் பாம்புகளை அப்படியே சாக்கு பையில் வைத்து அடைத்து விடுகின்றனர்.
அப்போது ஏராளமான பாம்புகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வனத்துறை அலுவலகத்திலேயே இறந்து விடுகின்றது. பாம்புகள் உயிரிழப்பதற்கு வனத்து றையினரின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சில பாம்புகள் 2 முதல் 3 நாட்கள் கழித்து விடுவிக்கும் போது எந்த அசைவுகளும் இல்லாமல் மெதுவாக ஊர்ந்து செல்வ தாகவும் கூறுகின்றன.
பாம்புகளைப் பிடித்த உடனே விடுவிக்காமல் அதனை 2, 3 நாட்கள் சாக்கு பைகளிலேயே அடைத்தி ருப்பதால் மழை மற்றும் வெயில் காலங்களில் அங்கேயே இருந்து உணவு கூட இல்லாமல் இறந்து விடும் அவலநிலை நீடிக்கிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒடுகத்தூர் அடுத்த நேமந்தபுரம் பகுதிகளில் 5 அடி நீளம் கொண்ட நாகப் பாம்பு பிடிப்படிப்பட்டது.
அந்தப் பாம்பை இன்று வரை விடுவிக்காமல் வனத்துறை அலுவலகத்தில் சாக்கு பையில் வைக்கப்ப ட்டுள்ளது. இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் கடந்த 2 வாரத்திற்கு முன்பு பல்வேறு பகுதிகளில் பிடிபட்ட 4 பாம்புகளை 4 நாட்களாக விடுவிக்காமல் வனத்துறை யினர் சாக்கு பயிலே அடைத்து வைத்திருந்தனர்.
பின்பு எடுத்துச் சென்று விட்டபோது அதில் 2 பாம்புகள் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.