சத்துவாச்சாரி திருப்பதி விநாயகர் கோவிலில் ஸ்ரீ விஷ்ணு பாராயணம்
- உலக மக்கள் நன்மைக்காக நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ திருப்பதி விநாயகர் கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் மற்றும் ஜப யக்ஞம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயண மண்டலிகள் சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயண மண்டலி தலைவர் வி. கணபதி தலைமை தாங்கினார். பொருளாளர் ஜி.விஜயராகவன் அனைவரையும் வரவேற்று பேசினார். செயலாளர் வி.சுப்பிரமணியன் நிதி நிலை குறித்து பேசி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
கோவிலில் சுப்ரபாதம், விக்னேஷ்வரர் பூஜை, ஸங்கல்பம், 12 ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயண ஆவர்த்திகள், ஜப யக்ஞம், புஷ்பாஞ்சலி, ஸ்ரீ கோவிந்த நாம நாமாவளி, மந்திர புஷ்பம் மற்றும் ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகளை வைதீக முறைப்படி மண்டலி குழுவினர் செய்திருந்தனர்.
செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீ திருப்பதி விநாயகர் கோவில் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள், காந்திநகர் கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
முடிவில் மகளிரணி உறுப்பினர் சுகந்தி ராமமூர்த்தி நன்றி கூறினார்.