உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் டாக்டர். ஆர். சிதம்பரம் பேசிய காட்சி.

வி.ஐ.டி.யில் கருத்தரங்கு இந்தியா பொருளாதார ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மேம்படுத்தப்படுகிறது

Published On 2022-11-11 15:20 IST   |   Update On 2022-11-11 15:20:00 IST
  • முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் டாக்டர். ஆர். சிதம்பரம் பேச்சு
  • பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வழியாகவும் பங்கேற்றனர்

வேலூர்:

விஐடியில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப தொலைநோக்கு என்ற கருத்தரங்கு நடந்தது. இதில் இந்தியாவின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகரும், அனு ஆற்றல் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் ஏ.ஐ.சி.டி.இ-யின் பேராசிரியரும் பத்ம விபூஷன், டாக்டர். ஆர். சிதம்பரம் பேசியதாவது:-

கருத்தரங்கு

இந்தியா பொருளாதார ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மேம்படுத்தப்படுகிறது. இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கமானது ஆராய்ச்சியின் தேவைகள் அதற்கு கல்வி நிறுவனங்களின் முக்கிய பங்கு, அதேபோல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதாகும்.

இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும்

இந்தியா அறிவியலிலும், பொருளாதாரத்திலும் உலக அரங்கில் முன்னணி வகிக்க வேண்டும். இந்தியா பொருளாதார ரீதியாக வளர அறிவியல் ரீதியாக மேம்பட்ட மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த கருத்தரங்கில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் விஐடி துணைவேந்தர், இணை துணை வேந்தர், பதிவாளர், துறை தலைவர்கள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வழியாகவும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News