உள்ளூர் செய்திகள்

எம்.எல்.ஏ, மேயர் ஆய்வு செய்த காட்சி.

வேலூர் கோட்டையில் ரூ.12 லட்சத்தில் இருக்கைகள்

Published On 2022-12-22 15:47 IST   |   Update On 2022-12-22 15:47:00 IST
  • ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது
  • எம்.எல்.ஏ, மேயர் ஆய்வு

வேலூர்:

வேலூர் கோட்டை வளாகத்தில் காலை மாலை என இரு வேளைகளில் ஏராளமானார் நடை பயிற்சி செய்து வருகின்றனர்.

மேலும் கோட்டையினுள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், அருங்காட்சியகம் உள்ளிட்டவைகளை சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் நடைப்பயிற்சி செய்பவர்கள் ஓய்வு எடுப்பதற்காக இருக்கைகள் அமைக்க வேண்டும் என வேலூர் மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் ரூ 12 லட்சம் மதிப்பில் கிரானைட் கற்களால் ஆன 50 இருக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இருக்கைகள் அமைக்கும் பணியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மேயர் கூறுகையில், இருக்குகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்ததும் இருக்ககைள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News