உள்ளூர் செய்திகள்

வேலூர் பழைய மாநகராட்சி எதிரே உள்ள மாநகராட்சி சொந்தமான கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.

வேலூர் மாநகராட்சியில் வாடகை செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்

Published On 2022-12-02 15:55 IST   |   Update On 2022-12-02 15:55:00 IST
  • அதிகாரிகள் நடவடிக்கை
  • ரூ.1.50 லட்சத்திற்கும் மேல் வாடகை பாக்கி உள்ளது

வேலூர்:

மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பெங்களூர் ரோடு லாரி செட், பழைய மாநகராட்சி வளாகத்திற்கு எதிராக உள்ள ஏ.கே.எம்.சி. வளாகம், வெங்கடேஸ்வரா பள்ளி எதிரே உள்ள காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இதில் பல கடைகளில் ரூ.1.50 லட்சத்திற்கும் மேல் வாடகை பாக்கியுள்ளது.

இதனை உடனடியாக செலுத்துமாறு மாநகராட்சி சார்பில் கடைக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

ஆனாலும் வாடகை செலுத்தாமல் உள்ளனர்.இன்று காலையில் வாடகைபாக்கி செலுத்த தவறிய 7 கடைகளுக்கு மாநகராட்சி 4-வது மண்டல உதவி வருவாய் அலுவலர் தனசேகர் தலைமையில் சீல் வைத்தனர்.

தொடர்ந்து வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News