உள்ளூர் செய்திகள்

ரூ.4 லட்சம் சீட்டு பணம் மோசடி செய்ததாக எஸ்.பி. ஆபீசில் புகார்

Published On 2022-09-26 15:39 IST   |   Update On 2022-09-26 15:39:00 IST
  • மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் அருகே உள்ள மேட்டு இடையம்பட்டியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

நான் லாரியில் செங்கல் மணல் ஓட்டி வருகிறேன் கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 3 சீட்டுகளுக்கு மாதந்தோறும் 25,000 கட்டி வந்தேன். திடீரென அவர்கள் சீட்டு பணம் தர மறுத்து விட்டனர்.

2 சீட்டுகளுக்கான தொகை ரூ.9,20,000 அவர்கள் தர வேண்டியிருந்தது. பின்னர் 4 லட்சத்து 52 ஆயிரத்து 300 மட்டும் தந்தனர்.மீதி ரூ.4,67,700 பணத்தை தரவில்லை. இது பற்றி கேட்டால் என்னை அவதூராக பேசி மிரட்டல் விடுக்கிறார்கள். எனக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.அவர்களின் எதிர்காலத்திற்காக சீட்டு பணம் கட்டினேன்.

எனது பணத்தை மீட்டு தந்து மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News