உள்ளூர் செய்திகள்

சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-26 14:38 IST   |   Update On 2023-10-26 14:38:00 IST
  • 30 பேர் கைது
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட தலைவர் எலிசபெத் ராணி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் மல்லிகா வரவேற்றி பேசினார். சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில தலைவர் மோகன மூர்த்தி தொடக்க உரையாற்றினார்.

தேர்தல் கால வாக்குறுதியான வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6750 அகவிலை படியுடன் சேர்த்து வழங்க வேண்டும் 10 வருடம் பணி முடித்த சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறை காலி பணியிடங்களில் 50 சதவீத முன்னுரிமை அடிப்படையில் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்குவதை கைவிட்டு சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் முருகேசன் மாவட்ட துணை தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போலீசார் அனுமதி இல்லா ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News