உள்ளூர் செய்திகள்

கல்லூரி பேராசிரியரிடம் லோன் ஆப் மூலம் ரூ.13 லட்சம் பறிப்பு

Published On 2023-02-15 15:18 IST   |   Update On 2023-02-15 15:18:00 IST
  • ஆன்லைன் முகவரியில் தனது வங்கி விவரங்களை பதிவு செய்தார்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

பேரணாம்பட்டை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். உடல் நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரணாம்பட்டு வந்தார்.

அவரது செல்போன் மூலம் வங்கி லோன் ஆப் செயல்பாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் வங்கியின் லோன் ஆப் செயல்படவில்லை.

இது குறித்து செல்போனில் வந்த வங்கி உதவி எண்ணை தொடர்பு கொண்டார். அதில் பேசிய மர்ம நபர்கள் ஆன்லைன் முகவரி அனுப்பினர். அதில் வங்கியின் விவரங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினர்.

இதனை நம்பிய பேராசிரியர் ஆன்லைன் முகவரியில் தனது வங்கி விவரங்களை பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து 3 நாட்களில் பேராசிரியரின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.13 லட்சத்து 15 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் இது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News