உள்ளூர் செய்திகள்
வேலூர் கிரீன் சர்க்கிளில் உள்ள பள்ளம்
சாலையில் உள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- வேகமாக வரும் பைக்குகள் இறங்கும் போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது.
கால்வாயை இணைக்கும் தார் சாலைக்கும் சிமெண்டு சாலைக்கும் நடுவில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளது. வேகமாக வரும் பைக்குகள் இறங்கும் போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.
மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தினமும் அந்த சாலையை கடந்து செல்கின்றனர்.
ஆனால் சாலையை சீரமைக்க யாரும் முன்வரவில்லை. விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.