உள்ளூர் செய்திகள்

அரிசி வியாபாரி மகன் தற்கொலை

Published On 2022-12-23 15:35 IST   |   Update On 2022-12-23 15:35:00 IST
  • கழிவறையில் தூக்கில் தொங்கினார்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

வேலூர் வேலப்பாடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி. மண்டித் தெருவில் அரிசி மண்டி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

2-வது மகன் ராமு (வயது 40) தந்தையுடன் வியாபாரத்தை கவனித்து வந்தார்.

ராமு தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கூறியுள்ளார். அவரது அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

திருமணமாகாத விரக்தியில் இருந்த ராமு இன்று காலை அவர்களது வீட்டின் மாடியில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராமு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வேலூர் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News