உள்ளூர் செய்திகள்

கருத்து கேட்பு கூட்டத்தை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு கருத்து கேட்பு கூட்டம்

Published On 2022-11-04 15:23 IST   |   Update On 2022-11-04 15:23:00 IST
  • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
  • மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்திற்கு டெல்லி முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமை தாங்கினார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாநில திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சீனிவாசன், சென்னை யூனிசெப் நிறுவனத்தின் முன்னாள் கல்வி ஆலோசகர் அருணா ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் பேசியதாவது:-மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் முன் மாதிரியாக தமிழகத்தில் கல்விக்கான தனி குழு அமைத்துள்ளனர். வேறு எங்கும் அமைக்கப்பட வில்லை.

மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இதுவரை 6 மண்டலங்களில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 7-வது வேலூரில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. நாளை சென்னையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. மற்ற இடங்களில் கூட்டத்தின் போதே மாணவர்கள் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் பின்னால் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தின் நோக்கமே மாணவர்களின் கருத்துக்களை பெறுவது தான். எனவே மாணவர்கள் முன்னால் வரிசையில் அமர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

கருத்துக்களை தெரிவிக்கும் போது மாணவர்கள் அச்சம், தயக்கமின்றி பேசலாம்.தங்க.ள் கருத்துக்களை தாராளமாக தெரிவிக்கலாம் அதுதான் கூட்டத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.

இவர் அவர் பேசினார். கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் கல்வியா ளர்கள் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News