உள்ளூர் செய்திகள்

வேலூர் மார்க்கெட் பகுதியில் உள்ள தள்ளுவண்டி வியாபாரிகளிடம் வாடகை வசூல் செய்ய வேண்டும்

Published On 2023-01-23 15:20 IST   |   Update On 2023-01-23 15:20:00 IST
  • மாநகராட்சி 2-வது மண்டல கூட்டத்தில் வலியுறுத்தல்
  • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்

வேலூர்:

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் நரேந்திரன் தலைமையில் இன்று நடந்தது. மேயர் சுஜாதா மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 2-வது மண்டல பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும் பல்வேறு பணிகளுக்கு அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேசினர்.

கவுன்சிலர் கணேஷ் சங்கர்;-

வேலூர் பழைய பஸ் நிலையம் மண்டி தெரு லாங்கு பஜார் பகுதிகளில் ஏராளமானோர் சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் தரைக்கடை வைக்கப்பட்டுள்ளன.இந்த கடைகள் வைக்க மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளதா அல்லது அப்படி அனுமதி வழங்கி இருந்தால் அந்த வியாபாரியிடம் வரி, வாடகை வசூல் செய்ய வேண்டும். அதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.

கவுன்சில சுமதி மனோகரன் (பாஜக);-

18-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலை அமைக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம் எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பஸ் நிலையம் அருகே சாமுவேல் நகர் பகுதியில் குடிநீர் சப்ளை உடனடியாக செய்ய வேண்டும்.

தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள் 2-வது மண்டல பகுதியில் மாடு, நாய்கள், பன்றிகள் தொல்லைகளை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த 2-வது மண்டல அதிகாரிகள் சத்துவாச்சாரி ஆற்காடு ரோடு உட்பட வேலூர் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது.

முதற்கட்டமாக மாடுகளை சாலைகளில் அவிழ்த்து விடக்கூடாது என அவர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்படும். அதனை மீறி மாடுகளை சாலையில் அவிழ்த்து விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News