உள்ளூர் செய்திகள்
- பெண் தற்கொலை மிரட்டல்-பரபரப்பு
- அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர், சத்துவாச்சாரி, வள்ளலார் உள்ளிட்ட பகுதிகளில் சாலை யோரங்களில் கடைகள் அமைத்து போக்கு வரத்துக்கு இடையூராக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து மாநகராட்சி 3-வது மண்டல கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் 2-வது மண்டல கட்டிட ஆய்வாளர் நிர்மலா தேவி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் வள்ளலார் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்ப ட்டிருந்த கடைகளை அகற்ற முயன்றனர்.
அப்போது கடையின் பெண் உரிமையாளர் கடைகளை அகற்றினால் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொள்வதாக அதிகாரிகளை மிரட்டினார்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டல் விடுத்த பெண்ணிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை அப்புறப்ப டுத்தினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.