உள்ளூர் செய்திகள்

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கோட்டை சுற்றுச்சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இன்று அகற்றினர்.

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Published On 2022-10-27 10:18 GMT   |   Update On 2022-10-27 10:18 GMT
  • மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை மேம்படுத்தப்பட உள்ளது

வேலூர்:

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் பெரியார் பூங்காவை ஒட்டி நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.

தற்போது கோட்டை சுற்றுச்சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த சாலை முழுவதும் கூடுதல் மின் வசதி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இதற்காக கோட்டை சுற்றுச்சாலையில் ஆக்கிரப்புகளை அகற்ற மாநகராட்சி அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. பெரியார் பூங்காயொட்டி இருந்த 3 கடைகளை இன்று மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

எந்த காரணத்தை கொண்டும் கோட்டை சுற்றுச்சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்க கூடாது. மீறி வைக்கப்படும் கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News