உள்ளூர் செய்திகள்
வேலூரில் ராஜூவ்காந்தி தேசிய ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம் தொடங்கப்பட்டது,
வேலூரில் ராஜூவ்காந்தி தேசிய ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம்
- மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டீக்காராமன் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோலர் கலந்து கொண்டனர்.
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ராஜீவ்காந்தி தேசிய ஆட்டோஓட்டுநர்கள் நலச்சங்கம் இன்று தொடங்கப்பட்டது.
வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டீக்காராமன், நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கொடிஏற்றி இனிப்பு வழங்கி பேசினார்.
வாகித்பாஷா முன்னிலை வகித்தார். மண்டல தலைவர்கள் ரகு, ஜான்பீட்டர், வார்டு தலைவர்கள் பாஸ்கரன் கவுஷிக் கப்பல்மணி, துளசிராமன், தங்கமணி, ஹரிகிருஷ்ணன். முபாரக்பாஷா, இம்தியாஸ்காதரி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதில் ஆட்டோ சங்க தலைவர் முனியப்பன், செயலாளர்கள் வெங்கடேசன், பொருளாளர் பூபதி துணைத் தலைவர்கள், குமரன். பாலா.துணைசெயலாளர்கள், பாபு, தண்டபாணி. மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.