உள்ளூர் செய்திகள்

சத்துவாச்சாரியில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனர்.

பணத்தை மட்டும் கரெக்டா பேங்க்ல. போடுறீங்க. அது மாதிரி குப்பை போட்டால் என்ன

Published On 2022-06-25 11:05 GMT   |   Update On 2022-06-25 11:05 GMT
  • பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை போட்டோ எடுத்து கொடுத்தால் ரூ.500 பரிசு
  • சத்துவாச்சாரியில் விழிப்புணர்வு பேனரால் பரபரப்பு

வேலூர்:

வேலூர் மாநகராட்சி குப்பை தொட்டி இல்லா மாநகராட்சி ஆகும். இதற்கு மாற்றாக மொத்தம் உள்ள 60 வார்டுகளில் பொது மக்கள் வீட்டிலேயே மங்கும் குப்பை, மங்காத குப்பை என தரம் பிரித்து வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

ஆனால் பலர் குப்பைகளை தரம் பிரித்து வழங்காமல் பொது இடத்தில் கொட்டிவிடுகின்றனர்.

இதனால் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் பொறுட்டும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வேலூர் மாநகராட்சி 2- வது மண்டலத்திற்க்குட்பட்ட 27-வது வார்டு பழைய முருகன் தியேட்டர் பகுதியில் கவுன்சிலர் சதீஷ்குமார் பாச்சி சார்பில் "நூதனமான" விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் "உறைக்கிற மாதிரி ஒரு வார்த்தை" என்ற தலைப்பில் பணத்தை மட்டும் கரெக்டா பேங்கில் போடுறிங்க, அதுமாதிரி குப்பையையும் குப்பை வண்டியில் போட்டால் என்ன?. மீறி குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம் மற்றும் பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை போட்டோ எடுத்து கொடுத்தால் 500 ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

இது தொடர்பாக 9944581740 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சத்துவாச்சாரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News