உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட காட்சி.

குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடு

Published On 2023-01-06 15:37 IST   |   Update On 2023-01-06 15:37:00 IST
  • பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்
  • அதிகாரிகள் உடன் இருந்தனர்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிக ளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதி தொகுதிகளில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வேலூர் மாவட்டத்திலேயே அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாக உள்ளது.

குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 642 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 355 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 43 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 40 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 9713 பேர் அதிகம்.

குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டு பொது மக்களின் பார்வைக்கு வைக்கும் நிகழ்ச்சி நேற்று குடியாத்தம் தாலுகா அலுவ லகத்தில் நடைபெற்றது.குடியாத்தம் தாசில்தார் எஸ். விஜயகுமார் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான புதிய இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டார்.

Tags:    

Similar News