உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு எஸ்.பி .திருநாவுக்கரசு,கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தனிப் பிரிவு எஸ்.பி.ஆய்வு

Published On 2022-06-27 16:02 IST   |   Update On 2022-06-27 16:02:00 IST
  • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்தது.
  • புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார்.

வேலூர்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29-ம் தேதி வேலூர் வருகிறார்.வேலூர் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளன. இன்று காலை முதல்அமைச்சர் தனிப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு முதலமைச்சர் வரும் இடங்களை ஆய்வு செய்தார்.

புதிய பஸ் நிலையம் அண்ணா சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை, கோட்டை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தல் மேடை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News