உள்ளூர் செய்திகள்

வீடு வீடாக குப்பை சேகரிக்க தனியார் ஆட்கள் வருகிறார்கள்

Published On 2023-07-22 14:29 IST   |   Update On 2023-07-22 14:29:00 IST
  • வேலூர் மாநகராட்சியில் வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறை
  • வாகனங்களும் தனியாருக்கு வாடகைக்கு விட முடிவு

வேலூர்:

வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் தூய்மை பணியாளர்கள் தினமும் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

அந்தந்த மண்டலங்களில் உள்ள குப்பை கிடங்குகளில் வைத்து பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை சிமென்ட் தொழிற்சாலைக்கும் அனுப்பி வைத்தனர்.

இதற்காக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 200 பேர், ஒப்பந்த பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

மாநகராட்சி முழுவதும் ஒட்டுமொத்த குப்பைகளையும் அகற்றும் பணி மாநகராட்சி வசம் இருந்தது.

இந்நிலையில் மாநகராட்சியில் குப்பைகள் அனைத்தையும், வீடு, வீடாக சென்று சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் சம்பளம் முதற்கொண்டு டெண்டர் எடுக்கும் நிறுவனங்களே வழங்கிவிடும்.

மாநகராட்சி நிரந்த பணியாளர்கள் மூலம் கால் வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் குப்பைகள் அள்ள பயன்படுத்திய வாகனங்களும் தனியாருக்கு வாடகைக்கு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது என்று மாநகராட்சிக்கு புகார்கள் வந்தால், தனியாரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான ஆலோச னைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News