உள்ளூர் செய்திகள்
சத்துவாச்சாரியில் நாளை மின்நிறுத்தம்
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி தடை
- மின் அதிகாரி தகவல்
வேலூர்:
சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சத்துவாச்சாரி பேஸ் - 1, 2, 3, 4, 5 மற்றும் அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேல்ரங்காபுரம், சைதாபேட்டை, சி.எம்.சி. காலனி, எல்.ஐ.சி. காலனி, காகிதபட்டரை, இ.பி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.