போலீஸ் மோப்ப நாய்.
வேலூரில் போலீஸ் மோப்ப நாய் திடீர் சாவு
- 250 கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பறிய உதவியது
- கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது
வேலூர்:
வேலூர் மாவட்ட போலீஸ் மோப்பநாய் பிரிவில் லூசி, ஷிம்பா, அக்னி, சாரா, ரீட்டா ஆகிய மோப்பநாய்கள் உள்ளன. இதில் லூசி, சிம்பா ஆகியவை ஓய்வு பெற்றுள்ளன.
தொடர்ந்து இந்த நாய்கள் மோப்பநாய் பிரிவில் பராமரிக்கப்படுகிறது.இந்த நிலையில் மோப்பநாய் ஷிம்பாவிற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதற்கு வேலூர் கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.
அப்போது ஷிம்பாவுக்கு கேன்சர் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஷிம்பா இன்று காலை பரிதாபமாக இறந்தது.
இதனை போலீஸ் மரியாதை உடன் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
மோப்பநாய் ஷிம்பா கடந்த 2013-ம் ஆண்டு 3 மாத குட்டியாக மோப்பநாய் பிரிவில் சேர்க்கப்பட்டது. 250 கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் துப்பறிய பயன்படுத்தியுள்ளனர்.
ஏலகிரி மலையில் நடந்த கோடை விழாவில் நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்த கண்காட்சியில் ஷிம்பா முதல் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.