உள்ளூர் செய்திகள்

மாற்று வீடு கேட்கும் போலீஸ் குடும்பத்தினர்

Published On 2022-11-24 15:12 IST   |   Update On 2022-11-24 15:12:00 IST
  • வேலூர் போலீஸ் குடியிருப்பு சீரமைப்பு
  • இடம் பெயருவதில் சிக்கல் உள்ளதாக புகார்

வேலூர்:

வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் பின்புறம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு 72 வீடுகள் உள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு முதல் இந்த குடியிருப்பு பயன்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் தற்போது கட்டிடத்தில் பல்வேறு இடங்களில் விரிசல், சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது.

இதை சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல் வாரத்தில் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

எனவே இங்கு குடியிருப்பவர்களை தற்காலிகமாக காலி செய்ய அங்கு நேற்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் ஒலிபெருக்கி மூலமும் குடியிருப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், உடனடியாக காலிசெய்வதில் சிரமம் உள்ளது. வேறு வீடுகள் பார்த்து இடம்பெறுவதில் சிக்கல் உள்ளது.

எனவே பிற காவலர் குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகளை தற்காலிகமாக ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News