உள்ளூர் செய்திகள்

அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொய்கை மாட்டுச்சந்தை ஏலம் நடந்த காட்சி.

பொய்கை மாட்டு சந்தை ரூ.96 லட்சத்திற்கு ஏலம்

Published On 2023-03-31 15:28 IST   |   Update On 2023-03-31 15:28:00 IST
  • 50-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்
  • அதிகாரிகளிடம் ஏலத்தாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட வாரச் சந்தைகளில் பெரிய சந்தையானது பொய்கை மாட்டுச்சந்தை ஆகும்.

இவை கடந்த மாதம் முதலே 2023- 24 -ஆம் ஆண்டுக்கான ஏலம் விடுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருந்தது. 4 முறை ஏலம் விடப்பட்டு அரசுக்கு சராசரியான தொகை வரவில்லை எனவும் பலதரப்பட்ட காரனத்திற்க்காகவும் ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் நேற்று 5 வது முறையாக ஏலம் விடப்பட்டது. இதில் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி தலைமையிலும், அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் குமார பாண்டியன், மேளாலர் சத்தீஸ்குமார், பொய்கை ஊராட்சிமன்ற தலைவர் பி.கே வெங்கடேசன் ஆகியோரின் முன்னிலையிலும் நடைப்பெற்றன.

இதில் சுமார் 23 ஏலத்தாரர்கள் முன்பணமாக ரூ.15 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் ஏலத்தாரர்களாக கலந்து கொண்டனர். முதலில் பொய்கை மாட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், இதனை அடுத்து பொய்கை ஊராட்சியில் நடக்கும் மாட்டுச்சந்தைக்கு சத்தியமங்கலம் கிராமங்கள் வழியாகவே வாகனங்கள் வந்து செல்கின்றன.

இதனால் சத்தியமங்கலம் ஊராட்சிகளில் சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் அசுத்தம் ஏற்படுகிறது எனவும் சத்தியமங்கலம் ஊராட்சி சேர்ந்தவர்கள் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

மேலும் பொய்கை சந்தையில் விடப்படும் ஏலத்தில் நிதி ஒதுக்கும் போது சத்தியமங்கலம் ஊராட்சிக்கும் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் ஏலத்தாரர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து முதலில் குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 65 லட்சத்திலிருந்து கேட்கப்பட்டது தொடர்ந்து ஏலத்தரர்கள் ஏலம் கேட்டு வந்த நிலையில் ரூ. 80 லட்சத்து ஓராயிரம் என ஏலம் கேட்கப்பட்டது. இதில் 18 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் இரண்டு சதவீதம் வருமான வரி ஆகியவை சேர்த்து ரூ. 96 லட்சத்து ஆயிரத்து 200 ரூபாய்க்கான பொய்கை ஊராட்சியை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஏலத்தை எடுத்தார்.

அரசுக்கு சராசரி தொகை வந்துவிட்டதாக லோகநாதன் என்பவருக்கு பொய்கை மாட்டுச் சந்தை ஏலம் வழங்கப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்ட ஏலத்தாரர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News